பாடசாலை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து

கம்பஹா வத்தளை – எலபடவத்த, ஹெந்தல பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றில் நேற்று (6) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வத்தளை பொலிஸார், வெலிசறை கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஆடைகள் மற்றும் பாடசாலைகளை உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் ஒருவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply