மன்னார் மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கான விசேட செயலமர்வு

இளைஞர் யுவதிகளுக்கு இடையே சமூக ஒத்திசைவை பலப்படுத்தல் எனும் தொணிப்பொருளில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் வாழ்வுக்கான தன்னார்வ தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி ஓய்வு பெற்ற ஆசிரியர் லயன் ரெஜினா இராமலிங்கம் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஜேக்கா மண்டபத்தில் இடம் பெற்றது

மாவட்ட ரீதியா தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆளுமையை வெளிப்படுத்தவும் இனம்,மத ,மொழி,கலாச்சார பிரிவினை இன்றி அனைவரும் சமூக ஒத்திசைவுடன் சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைகளை உருவாக்கும் முகமாக குறித்த செயற்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் ரஹமா நிறுவன பணிப்பாளர் மரிக்கார் ரஹமா நிறுவன அதிகாரிகள் லியோ இளைஞர்கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம ரீதியிலான இளைஞர்கழக அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply