நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகின்றது.

ஐகக்கிய மக்கள் சக்தியால் பாராளுமன்றிலும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இதேவேளை அசாதாரண நிலைக்கு மத்தியில் பாராளுமன்றம் எதிரிவரும் 17ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதியால் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பிலும் தனது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியை நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதும் அடிப்படைத் தேவையாக நாங்கள் கருதுகிறோம்.

இதன்படி, தற்போதைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த தொடர் யோசனைகளைப் பயன்படுத்தி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதற்கு சமகி ஜன பலவேகய தலைமையிலான ஐக்கிய நல்லிணக்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply