அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் மஹிந்தவும் கண்டனம்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவசரகால சட்டம் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயத்தை விரட்டலாம்!அவசரகால சட்டம் என்பது வன்முறையின் முன்னால் ஒரு வெற்று பயமுறுத்தும் காக்கை என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply