ஜனாதிபதி மாளிகையில் திரண்ட ஆயிரக்கணக்கான பிக்குகளால் பரபரப்பு.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்றலில் நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 28 வது நாளை எட்டியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி செயலகம் முன்னால் அவசரகாலச் சட்டத்திற்கு மத்தியில் தற்போது தேசிய பிக்கு முன்னணியைச் சேர்ந்த பெருமளவிலான பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply