பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்திடம் ஜனாதிபதி கோரிக்கை !

தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, நேற்று தொலைபேசி அழைப்பு மூலம் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உட்பட சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டது.

அவர்களின் பரிந்துரைகளின் பிரகாரம் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிவித்துள்ளது.

Leave a Reply