இதுவரை கடவுச் சீட்டை மஹிந்த கையளிக்கவில்லை: சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றில் சுட்டிக்காட்டு

கொழும்பு,மே 25

அமைதிப் போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும், இதுவரை  அதனை  அவர் செய்யவில்லை என புதன்கிழமை ( 25) கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அத்துடன் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்  மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கடவுச் சீட்டை நீதிமன்றுக்கு கையளிக்கவில்லை என்றும் சட்ட மா அதிபர் சார்பில் இந்த விசாரணைகளை மேற்பார்வைச் செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன கோட்டை நீதிவான் திலின கமகேவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

Leave a Reply