21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை!

<!–

21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை! – Athavan News

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று  நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெறப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply