முன்னாள் பிரதமரிடம் சிஐடி வாக்குமூலம்

கொழும்பு, மே 26

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப்புலனாய்வு துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த பின்னர் பொதுஜன பெரமுன குண்டர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதல் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. நாடு முழுவதும் ஒன்று திரண்டு, பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். வன்முறைகளில் சுமார் 10 வரையானவர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவம் பற்றி குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு அங்கமாக மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply