பிரதமர், ஜனாதிபதிக்கு ஒட்சிசன் கொடுத்துக் காப்பாற்றுகின்றார்! கஜேந்திரகுமார்

இன்றைக்கோ நாளைக்கோ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ அவர்களுக்கு ஒட்சிசன் கொடுத்துக் காப்பாற்றுகின்ற வகையில் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவித வெட்கமும் இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் உதவிகளை வழங்கக் கோரியும் முதலீடுகளைச் செய்யக் கோரியும் கோட்டா – ரணில் அரச தரப்பினர் அழைப்பு விடுக்கின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஒற்றையாட்சிக்குள் ஒருமித்த நாடு, ஏக்கிய ராஜ்ய என்ற நாடகத்தைக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய ரணில் விக்கிரமசிங்க, தற்போது கோட்டாபய ராஜபக்ச கலைக்கப்பட சந்தர்ப்பங்கள் இருந்தபோது அவரைக் காப்பாற்ற முற்படுகின்றார்.

இந்த அரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களினுடைய உதவிகளையே இன்று நாடி இருப்பதன் மூலம் மிகவும் கேவலமான நிலையில் இவர்கள் உள்ளனர் என்பதை அறியலாம் -என்றார் 

Leave a Reply