நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஆராய்வு!

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் நாளையதினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

அதேவேளை தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்குஇ தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட வரையறைக்கு அமைய தலையீடு செய்யக்கூடிய விதம் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply