திருகோணமலையில் மண்ணெண்ணை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அலை மோதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மண்ணெண்ணைக்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சுமார் இரு வாரங்களுக்கும் மேலாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணை கிடைக்கப்பெறவில்லை.
திருகோணமலை முள்ளிப் பொத்தானை எரிபொருள் நிலையத்தில் நேற்று மக்கள் மண்ணெண்ணை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மண்ணெண்ணை விநியோகம் இடம்பெற முன்னர் காலை முதல் மக்கள் பல மணி நேரங்கள் வெயிலில் நின்று காத்திருந்த போதே விநியோகம் இடம்பெற்றது. ஒருவருக்கு 500 ரூபாவுக்கே மண்ணெண்ணெய் கொடுக்கப்பட்டது.





