யாழில் சோகம்;விபத்தில் சிக்கி பாடசாலை அதிபர் உயிரிழப்பு!

யாழ் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன் உயிரிழந்துள்ளார்.

ஏ – 09 நெடுஞ்சாலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றையதினம் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் மோதி விபத்து நிகழ்ந்திருந்தது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என்றும் அவர் முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் என்றும் தெரியவந்துள்ளது.

Leave a Reply