இலங்கைக்கு 260 மில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை வழங்கிய இந்தியா

கொழும்பு,மே 27

இலங்கைக்கு இந்தியா சில மருத்துவப் பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளது.

இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பினால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருத்துவப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவப் பொருட்களின் பெறுமதி சுமார் 260 மில்லியன் இலங்கை ரூபாவாகும்.

25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இன்று சனிக்கிழமை கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply