எரிபொருள் தட்டுப்பாடு; கூரை ஓடு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பு!

நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கூரை ஓடு தயாரிப்பாளர்களும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில்  ஊடக சந்திப்பொன்றை, அகில இலங்கை கூரை ஓடு தயாரிப்பாளர்  சங்கத்தினர், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தில் இன்று (27) நடத்தினர்.

குறித்த சந்திப்பில் கூரை ஓடுகள்  தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வாரத்துக்கு 50 லீட்டர் மண்ணெண்ணெய் வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை, அகில இலங்கை கூரை ஓடு தயாரிப்பாளர்  சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், “ஓடு தயாரிப்பதற்குத் தேவையான மண்ணெண்ணெய் கிடைக்காமை காரணமாக  தொழிற்சாலைகள் கடந்த 3 வார காலமாக மூடப்பட்டுள்ளன.

“எமது சங்கத்தில் 225 தயாரிப்பாளர்கள் உள்ளனர். 4,500 முதல் 5,000 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.

 “ஒரு தொழிற்சாலைக்கு வாரத்துக்கு 50 லீட்டர் மண்ணெண்ணெய் தந்தால் போதுமானது. நாட்டின் அபிவிருத்திக்கும் கட்டுமானப் பணிக்கும் நாம் அளப்பரியது  சேவையை ஆற்றி வருகின்றோம். எனவே, எமது கோரிக்கையை உரியவர்கள் செவிமடுக்க வேண்டும்” என்றனர்.

இந்த ஊடக சந்திப்பில் சங்கத்தின் தலைவர் பெப்டிஸ் பெர்ணான்டோ, உப தலைவர் மார்க்கஸ் பீரிஸ் புள்ளே,  செயலாளர் டபிள்யூ.பி.ஜே.ஏ.பெர்ணான்டோ, பணிப்பாளர் ஜெரால்ட் பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

  1. ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு
  2. அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்
  3. இலங்கைக்கு 25 தொன் மருத்துவப் பொருட்களை வழங்கிய இந்தியா!
  4. எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை! – வலுசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Leave a Reply