கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம்; பொலிசார் விசாரணை!

கோழி இறைச்சி வாங்கச் சென்ற தனது 09 வயது மகளை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அட்டுலுகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றிற்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் போலீஸ் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply