முள்ளியவளையில் எரிவாயு சிலிண்டர்களை பெற முண்டியடித்த மக்கள்!(படங்கள் இணைப்பு)

நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் நேற்றையதினம் எரிவாயு சிலிண்டர் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில்  எரிவாயு சிலிண்டர்களை பெற  மக்கள் முண்டியடித்ததை காணமுடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் இன்று எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை  அடுத்து ஒரு பொது விளையாட்டு மைதானத்தில் மக்கள்  கூடினர் இவ்வாறு கூடியவர்களில் 450 பேருக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்பட்டன

மேலும் பலர் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் அத்துடன் இந்த நடவடிக்கைக்காக பொலிஸார் இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த எரிவாயு சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் 4,965 ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply