தேசபந்து தென்னகோனின் தொலைபேசி இதுவரை கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்?

சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply