2022ன் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் உயர்வு!

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து, 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அந்த வளர்ச்சி வீதத்தில், மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், ஏப்ரலில் 445.79 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

  1. கட்டுமானத்துறையில் 75 வீதமானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து!
  2. எழுதுமட்டுவாழில் கைக்குண்டு மீட்பு!
  3. 240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் வசமாக சிக்கினார்!
  4. கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம்; பொலிசார் விசாரணை!
  5. ஏலத்தில் விடப்படும் திறைசேரி உண்டியல்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு
  6. சமூகவலைத்தளத்தில் ஒன்றாக வலம்வந்த ஜோடி; ஒரே நாளில் உயிரிழந்த சோகம்
  7. 21வது திருத்தச் சட்டம்; ஜனாதிபதியிடம் பெப்ரல் விடுத்துள்ள கோரிக்கை

Leave a Reply