யாழ் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கிவைப்பு(படங்கள் இணைப்பு)

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடற்றொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ள நிலையில், அவை இன்று (28) ஊர்காவற்துறை, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700 மீனவர்களுக்கு 15000 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

ஒரு பகுதி தீவுகளுக்கு இடையே படகு சேவைக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply