அட்டுலுகம சிறுமி மரணம்; விசாரணைகள் CIDயிடம்!

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், பாணதுறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரகம பொலிஸார் குறிப்பிட்டனர்.

பண்டாரகம – அட்டுலுகம பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில் சடலம் நேற்று பிரதேச மக்களால் கண்டெடுக்கப்ட்டது.

இதனைத் தொடர்ந்து, சடலம் பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்க்படவுள்ளன.

இதேவேளை, சிறுமியின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் வகையில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply