புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்: லிட்ரோ

கொழும்பு,மே 29

எரிவாயு விநியோகம் எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடங்கும் என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை திங்கட்கிழமை (30) 3,500 தொண் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று வருகை தரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் மறு அறிவித்தல் வரை வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply