பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு – 11 பேர் காயம்!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிபில – பதுலகம்மன மார்க்க வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிபில பிரதேசத்தில் வசிக்கும் 17 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காலி-கொழும்பு வீதியில் தடல்ல ஜயந்தி மாவத்தை சந்திக்கு அருகில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்று ஜெயந்தி மாவத்தை நோக்கி திரும்ப முற்பட்டபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரீபுர – சிங்கபுர வீதியில் பைனா வாங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் தங்காலை – மாத்தறை பிரதான வீதியில் தெவிநுவர கல்கனே வீதி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, கொழும்பு கண்டி வீதியில் தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு நோக்கிச் சென்ற வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply