மே 9 வன்முறை; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உட்பட 10 பேர் கைது!

கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் ஜே.வி.பியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் லக்ஷ்மன் பள்ளியகுரு உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரகெட்டிய மற்றும் மெதமுலான பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply