பசுமை உற்பத்தி பொருட்கள் மலிவு விலையில்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்!
இலங்கையில் முன்மாதிரியான சேவைகளையும், செயற்பாடுகளையும் நிகழ்த்திவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில்
தற்போது நாட்டில் நிலவும் வறுமை காரணமாக சேதன பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தேங்காய்கள் அரிசி மற்றும் தேவையான பொருட்கள் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பசுமை விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களுக்கும், வைத்தியசாலையில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்காகவும் இந்த விற்பனை நிலையம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் Dr.R முரளீஸ்வரன், பிரதி வைத்திய அத்தியட்சகர் Dr. J.மதன் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந் நிகழ்வு இடம்பெறுகின்றது.









