கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா – கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்றும் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப்பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply