அதிகாரத்திற்காக சண்டையிடும் இரு யானைகள் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா – மகாகச்சக்கொடிய கிராமத்திற்கு அருகில் இரண்டு காட்டு யானைகள் சண்டையிட்டு கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக தெரிவித்துள்ள வனவிலங்கு அதிகாரிகள், இரண்டு யானைகளும் தங்கள் பகுதியில் அதிகாரத்தை பெறுவதற்காகவே சண்டையிட்டுகொண்டதாக தெரிவித்தனர்.

இரண்டு யானைகளும் சுமார் இரண்டு நாட்களாக குறித்த பகுதியில் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இச்சம்பவத்தை பார்வையிட அதிகளவான மக்கள் அப்பகுதியில் குழுமியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply