வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

2021ஆம் ஆண்டில்  நாளொன்றுக்கு 5.6 பில்லியன் ரூபாவை வெளிநாட்டில் இருந்து கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்த தெரிவித்த அவர்,

“2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் நாட்டின் வருமானம் நாளொன்றுக்கு 3.2 பில்லியன் ரூபாவாக இருந்தது.

2014ஆம் ஆண்டைப் போன்று நாளொன்றுக்கு 2 பில்லியன் ரூபா போதுமானதாக இல்லை ஐந்து வருடங்களின் பின்னர் 2019ஆம் ஆண்டு எமது வருமானம் நாளொன்றுக்கு 5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வருமானத்தின் படி வருமானம் நாளொன்றுக்கு 5.6 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது.  

இரண்டு முக்கிய  செலவுகள் பொது ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்  என்பனவாகும்.

2020 ஆம் ஆண்டளவில், மொத்த அரசாங்க வருவாயில் 86% அரசாங்க சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. இரண்டாவது பெரிய செலவு பொதுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியாகும்.” என தெரிவித்தார். 

Leave a Reply