ஊடகவியலாளர் நடேசனுக்கு வவுனியா ஊடக அமையத்தில் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்றுநடைபெற்றது.

வவுனியா ஊடகஅமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு, மலர்தூவி, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவுப்பகிர்வுரையினை ஊடகவியலாளர் ந. ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார்.

நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு தமது இதயபூர்வமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply