2.2 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை சந்தித்து, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் குறித்த மருந்துகளை இன்று கையளித்துள்ளார்.

79 வகையான அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு தேவையான மருந்துகளும் அவற்றில் அடங்கும்.

பிற செய்திகள்

Leave a Reply