மட்டுநகரில் எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

நாட்டில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்.

இன்று எரிவாயு சிலின்டரினை பெற்று கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தம் கருணாகரன் ஆகியோர் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பயன் இல்லை எனவும் அரச அலுவலகங்கள் கட்சிஅலுவலகங்கள் முன்னிலையில் போராட்டத்தினை முன்னெடுத்தால் மட்டுமே எரிவாயு சிலிண்டரினை பெற முடியும்.

இல்லாவிட்டால் இலங்கைக்கு வரும் எரிவாயு சிலின்டர்கள் அனைத்தும் மேல்மாகாணத்தற்கு மாத்திரமே விநியோகிக்கப்படும் என தெரிவித்ததோடு நீங்கள் எங்கு சென்று போராட்டங்களை மேற்கொண்டாலும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

·  சுற்றுலாத்துறையின் முக்கிய நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு! 

·  இரத்தினபுரியில் வாகன விபத்து; பொலிஸ் துணைப் பரிசோதகர் உயிரிழப்பு!   

·  கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!   

·  சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று;ஆட்டம் காணும் ஷங்காய்!    

·  நேபாள விமானம் விபத்து; கறுப்புப் பெட்டி கண்டு பிடிப்பு

·  Facebook : சமூகம் தமிழ் நியூஸ்

·  Twitter: சமூகம் ட்விட்டர்

·  Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்

·  YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply