மே 9 தாக்குதல் – நேற்றுக் கைதானவர் இன்று உயிரிழப்பு

மே – 9 சம்பவம் தொடர்பில் நேற்று (31) கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் மற்றும் ஏனைய வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸில் முன்னிலையாகிய பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதான மொரட்டுவை உஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் நேற்று மொரட்டுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply