தனியார் பஸ் சேவை திங்கள் முதல் நிறுத்தம்

கொழும்பு, ஜுன் 01

பஸ்களுக்கு தொடர்ச்சியாக டீசல் கிடைக்காததால், எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடா  என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விஜேரத்ன தெரிவித்தார்.

டீசல் பெறுவதற்கு தனியார் பஸ்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply