கோட்டாவின் சகா வைத்தியசாலையில் இல்லை! CID யினர் மறுப்பு

ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் கோட்டாபய ராஜபக்க்ஷவினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வாவின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

துமிந்த சில்வா பிரபல வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் வினவியபோது, அது பொய்யான தகவல் என குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply