விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழுமையாக நிரப்பிக் கொண்டு இலங்கை வரவும்!

இலங்கை வரும்போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா சர்வதேச விமான நிறுவனங்களிடம் கோரியுள்ளார்.

புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது விமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கான விமானங்களை இயக்கும் போது போதுமான அளவு விமான எரிபொருளுடன் வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply