எரிபொருளைக் குடிக்கும் யாழ் மக்கள்! கண்காணிப்புக்களை  துரிதப்படுத்த நடவடிக்கை 

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதங்கள் செல்லச் செல்லச் எரிபொருள் கொள்வனவு அதிகரித்துச் செல்வதாக மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருள் விநியோகம் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையில் மேற்கொள்வதற்கும் அதே போன்று எரிவாயு விநியோகத்தினை சீரமைத்து கண்காணிப்பதுடன் மேற்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.

இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் பற்றி ஆராயப்பட்டு இருக்கின்றன.

சமூர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவு தொகை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. 1 இலட்சத்து 6 ஆயிரம் 440 குடும்பங்கள் இந்த பயனை பெற உள்ளனர்.

அந்த வகையில் 1-2 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த,1,900 ரூபா கொடுப்பனவு 3,100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5,000 ரூபாவாக வழங்கப்படும்.

3 அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3,200 ரூபா கொடுப்பனவு 3,100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6,300 ரூபாவாக வழங்கப்படும்.

நான்கிற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 4,500 ரூபா கொடுப்பனவு 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாவாக வழங்கப்படும்.

மேலும் குறைந்த வருமானம் பெறுகின்ற சமுர்த்தி நிவாரணம் பெறத் தகுதியான காத்திருப்பு பட்டியலில் உள்ள 27,978 குடும்பங்களிற்கு மூன்று மாதாங்களிற்கு 5,000 ரூபா நிதி கொடுப்பனவு சமுர்த்தி வங்கிகளினால் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விநியோகம் கூடுதலாக உள்ளது.

இதனுடைய மேலதிக எரிபொருள் எங்கு செல்கின்றது எனவும் அதனை கருப்புச்சந்தைக்கு செல்லாத வகையிலும் முகாமைப்படுத்துவதற்கான திட்டத்தினை கூறுவோம் .

மேலும் இதன் இருப்புக்கள் பற்றி கணக்கிட்டு சரியான பாவனையாளர்களுக்கு விநியோகம் நடக்கின்றதா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். சிறு கைத்தொழிலாளர்களுக்கும் எரிபொருளினை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்

எங்களுக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் கண்காணிப்பினையும் பாதுகாப்பினையும் துரிதப்படுத்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

தட்டுப்பாடினை பயன்படுத்தி பல்வேறு தரப்பினர் துஸ்பிரயோகத்தினை செய்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகிறது.

அதி உச்ச அவசியத்தினை பயன்படுத்தி அதிக விலையில் கறுப்பு சந்தையில் விற்கிறார்கள் , இதனை மக்கள் தெரிவிக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply