நாட்டின் அமைதியின்மை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் தீவைப்பு, கொள்ளை, கொலை உள்ளிட்ட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை தயாரிக்கும் பணியை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி வழக்கறிஞர் பி.பீ. அலுவிஹாரே தலைமையில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ் வசந்த குமார ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி இன்று (01) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தார்.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply