
பெரும்போக நெற்செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்து மக்களையும் பெரிதும் பாதித்துள்ள நிலையில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் நெற்செய்கைக்கான தேவையான உரம் இன்மையால் நெல்விளைச்சலில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதனிடையே இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த மாதம் முதல் வாரத்தில் 65ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்
திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து
அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!
வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!
அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?
காலி முகத்திடலில் தாக்குதல்: சந்தேக நபர் ஜோன்ஸ்டன்!
கிழக்கில் முதன்முறையாக அமைக்கப்பட்ட மின் தகனசாலை
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்





