இந்தியப்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யால பருவத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் நேற்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்தவுடன் 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து மகா பருவத்திற்கான நன்மைகளை வழங்க முடியும் என கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply