நாடாளுமன்ற உறுப்பினரின் அரிசி ஆலையில் கைவரிசை காட்டிய இளைஞன் கைது

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினரின் அரிசி ஆலையில் கைவரிசை காட்டிய 34 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானுக்கு சொந்தமான அரிசி ஆலையில் 250 நெல்லு மூடைகள் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின்போது வவுனியா வைரவபுளியங்குளத்தை சேர்ந்த 34 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 90 நெல்லு மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 34 வயது இளைஞராவார்.

பிற செய்திகள்

Leave a Reply