நாட்டில் டெங்குப் பரவல் தீவிரம்!

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருடத்தில் இதுவரை 24,523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவற்றில் 6,483 பேர் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

நேற்று (01) மாத்திரம் 313 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன்மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே டெங்கு நோயாளர்கள் அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், கண்டி, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply