வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினரால் வாழ்வாதார உதவி திட்டம் வழங்கப்பட்டது.

வவுனியாவில் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனினால் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் 24 இலட்சத்தி 29 ஆயிரம் ரூபா பெறுமதியில் 80 பயனாளிகளுக்கு குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply