சீனாவிலிருந்து ஒரு தொகுதி மருந்து பொருட்கள் இலங்கைக்கு வருகை!

சீனாவின் நன்கொடையின் கீழ் வழங்கப்படும் மருந்துகளின் முதல் தொகுதி நாளை (03) இலங்கைக்கு வரவுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம், 10 மில்லியன் RMB பெறுமதியான 512,640 உயிர்காக்கும் எனோக்ஸாபரின் சோடியம் ஊசி மருந்துக்கான மானியம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

“உயிர் காக்கும் எனோக்ஸாபரின் சோடியம் ஊசியின் 512,640 ஊசிகளில் 256,320 சிரிஞ்ச்கள் நாளை நள்ளிரவில் முதல் சரக்கு வந்து சேரும்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனாவின் 500 மில்லியன் RMB மானியத்தின் ஒரு பகுதியே இந்த மருந்துப் பொருட்களின் முதல் தொகுதி என சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

“சீனாவில் இருந்து மருந்துகள் இரண்டு சரக்கு கப்பல்கள் மூலம் விநியோகிக்கப்படும்” என்று தூதரகம் மேலும் கூறியது.

Leave a Reply