அரச நிறுவனங்களில் வீட்டுத்தோட்டத்தை மேற்கொள்ளுங்கள்-கிழக்கு ஆளுனர் ஆலோசனை!

கிழக்கு மாகாண சபையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.

மாகாண விவசாய அமைச்சின் தலையீட்டில் இதனை ஒருங்கிணைக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்களுடனான பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (1) இடம் பெற்ற  விசேட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுனர்,

வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தி  பயிர்ச்செய்கை தோட்டங்களை உருவாக்குமாறும் விவசாயப் பயிற்றுவிப்பாளர்களுக்கு ஆளுநர் இதன் போது  அழைப்பு விடுத்தார்.

விவசாய ஆலோசகர்களாகிய உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது .அதாவது, விரைவில் அதை செய்ய ஊக்குவியுங்கள்.

இது தொடர்பிலான அனைத்தும், பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது . 

நாங்கள் களத்தில் இறங்க வேண்டும் இது எங்களுக்கு ஒரு சிறந்த  சந்தர்ப்பம். எல்லா வசதிகளும் கொண்ட விவசாயி, உங்களுக்கு கிடைக்குமா? அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் உள்ள தொடர்பு, செய்கைக்கும் உள்ள தொடர்பு மேம்பட வேண்டும்.

இந்நிகழ்வில் உள்ளூர் விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி ஹூசைன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply