நாடளாவிய ரீதியில் நாளை எரிவாயு விநியோகிக்கப்படும்!

நாளைய தினம் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

3,950 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய குறித்த கப்பல் கடந்த வார இறுதியில் நாட்டை வந்தடைந்த நிலையில் அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில், நேற்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

Leave a Reply