அமெரிக்க துாதர்-வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்காக அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்பது தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது என அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply