அமரகீர்த்தி கொலை தொடர்பாக மேலும் இரண்டுபேர் கைது!

<!–

அமரகீர்த்தி கொலை தொடர்பாக மேலும் இரண்டுபேர் கைது! – Athavan News

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரல கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தினத்தன்று, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply