காணாமல் போன தாய் சடலமாக மீட்பு !

காணாமல் போன தாய் சடலமாக மீட்பு !

மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதுடைய எம்.ஆர். பஸீரா என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து, பிரதேச மக்களும் பொலிசாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் மாலை குறித்த பெண் மருதமுனை  குளத்திலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply