புத்தளம் நோக்கி பயணமான ரயில் மருதானையில் தடம்புரண்டது

கொழும்பு,ஜுன் 03

மருதானை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.

மருதானை ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில், ரயில் சனிக்கிழமை மாலை தடம்புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

மருதானையிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இந்த நிலையில், ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவர, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்தது.

Leave a Reply