பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து; சந்தேக நபர் தப்பியோட்டம்

பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிபில, ஹெவல்வெல பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றுக்குள் வைத்தே குறித்த பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த குறித்த வங்கி முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகத்தை முழுமையாக மறைத்திருந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply